Aalim Hakim styles Rajinikanth for Jailer

Advertisment

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார்.

இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களான நிலையில் படப்பிடிப்பை படக்குழு தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனத்தால் ஜெயிலர் படத்தின் கதையில் நெல்சன் அதீத கவனம் செலுத்தி வருவதால் படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தன்னை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நெல்சன் ஜெயிலர் படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து, ரஜினியின் கதாபாத்திரத்தை கூடுதல் மெருகேற்றி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும்கூறப்படுகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="06419a8f-693e-4e96-a20c-04945fd1df6b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_1.jpg" />

Advertisment

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் முன்னணி பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்தான ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கிம்இணைந்துள்ளார். இவர்இப்படத்தில் ரஜினிகாந்தை இதுவரை யாரும் பார்த்திராத லுக்கில் மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கிம், " ஒரே ஒரு ராஜா ரஜினிகாந்துடன் பணிபுரியும் நாள் புதுமையானது" என்று குறிப்பிட்டுள்ளார்.